FOR MORE DETAILS

FOR MORE DETAILS
CLICK & READ THE SCHEDULE

Tuesday, April 14, 2009

இந்திய மக்கள் அனைவரும் நலமுடன் வாழ நமது அரசியல் சட்டத்தில் தேவையான மாற்றங்களைச் செய்திட வேண்டுகோள்.


பெறுநர்:
  1. மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர்

  2. மாண்புமிகு இந்தியக் துணைக் குடியரசுத் தலைவர்

  3. மாண்புமிகு இந்தியப் பிரதமர்

  4. மாண்புமிகு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

  5. மாண்புமிகு பாராளுமன்ற மக்களவை சபாநாயகர்

  6. மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகள்

  7. மாண்புமிகு மத்திய அம்மைச்சர்கள்

  8. மாண்புமிகு அனைத்து மாநில முதலமைச்சர்கள்

  9. இந்தியா தேர்தல் ஆணையம்

  10. தேசிய சட்டக் கமிஷன் (NATIONAL LAW COMMISSION)

  11. தேசிய சட்டப் பணிகள் ஆணையம்

  12. தேசிய மனித உரிமைகள் ஆணையம்

  13. தேசிய பெண்கள் ஆணையம்

  14. இந்திய அரசின் அட்டோர்னி ஜெனரல்

  15. இந்திய அரசின் சோலிசிடோர் ஜெனரல்

  16. மாண்புமிகு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள்

  17. அகில இந்திய பார் கவுன்சில் மற்றும் மாநில பார் கவுன்சில்கள்

  18. அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள்

  19. அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்

  20. அனைத்து சட்ட பேரவை உறுப்பினர்கள்

  21. சட்ட நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள்

  22. மத்திய மாநில தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், விவசாய சங்கங்கள், இளைஞர் சங்கங்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் இதர மக்கள் அமைப்புகள்

  23. சமூக நல ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வியாளர்கள், அறிவியலாளர்கள்

  24. பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள்

  25. சமுதாய நலன் விரும்பும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
மதிப்பிற்குரியஅம்மா/அய்யா
வணக்கம். நமது நாட்டின் அரசியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 59 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் உலகின் மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட ஜனநாயகக் குடியரசு எனும் பெருமிதத்துடன் நமது நாடு பல்வேறு முன்னேற்றங்களை அடைந்திட, நமது அரசியல் சட்டம் வழிகாடியகத்திகழ்ந்து வருகிறது.அதே நேரத்தில் நாடு பல்வேறு எதிர்மறையான பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறது.இந்தியர் ஒவ்வொருவரும் சுதந்திரமாக வாழும் உரிமையை (right to liberty) நமது அரசியல் சட்டத்தின் 21ஆவது பிரிவு வழங்கயுள்ளது. ஒருவர் சுதந்திரமான மனிதராக வாழ்வதற்கு கல்வி, வேலைவாய்பு, மருத்துவ வசதி , குடிய்ருக்க வீடு, தரமான வாழ்கை வாழ்வதற்கான வருமானம் போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் சமுதாயத்தில் அமைதியும், மக்களிடையே நல்லிணக்கமும், ஒருமைப்பாடும் நிலவிட வேண்டும். இவை மட்டுமல்லாது நாட்டுமக்கள் அனைவரும் சுகந்திரமாக வாழ்வதை உறுதிப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த பாராளுமன்றம், சட்டமன்றங்கள், நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை ஆகியவை நாட்டுமக்களின் பரிபூரணமான நம்பிக்கையைப் பெறும் விதத்தில் நேர்மையான முறையில் செயல்பட வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில்,நமது நாட்டில் இத்தகைய ஆரோக்கியமான சமுதாயச் சூழல் நிலவுகிறதா என்பது விவாதத்திற்குரியதாகும்.அரசியல் சட்டம் வழங்கியுள்ள சுதந்திரமாக வாழும் உரிமையை உண்மையான அர்த்தத்தில் பயன்படுத்தும் நிலையில் நாட்டு மக்களில் பெரும்பகுதியினரின் வாழ்க்கைச் சுழல் இல்லை என்ற வருந்தத்தக்க நிலைமை நீடிக்கிறது. இந்நிலைமாறி நாட்டுமக்கள் அனைவரும் உண்மையான சுதந்திர மனிதர்களாக நலமுடன் வாழத்தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுப்பதன் மூலமே நமது நாட்டின் ஒற்றும்மையைப் பாதுகாக்க முடியும். மேலும் உலகில் தலைசிறந்த ஜனநாயகக் குடியரசாக இந்தியா திகழ முடியும் என சமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கம் கருதுகிறது. இதற்காக நமது அரசியல் சட்டத்தில் தேவையான மாற்றங்களைச் செய்திடக் கோரி இச்சங்கம் கீழ்க் கண்ட தீர்மானங்களைச் சமர்ப்பிக்கிறது.

1. 110 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்குத் தேர்வு செய்யப்படும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 4913 ஆக உள்ளது। இந்த 4913 பேர் தான் நமது சமுதாய அமைப்பில் மிக உயர்ந்த அந்தஸ்து உடையவர்களாகத் திகழ்கின்றனர்। நாட்டின் முன்னேற்றத்திற்காக எத்தனையோ விதங்களில் தமது அறிவையும் ஆற்றலையும் உழைப்பையும் மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் உயிரையும் கூட அர்ப்பணிக்கும் கோடிக் 4913 பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் திகழ்கின்றனர்.
இவ்வாறு சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உண்மையான மக்கள் பிரநிதிகளாக,நேர்மையுடன் தன்னலமின்றி நமது தேசத்தின் நலனையே முழு மூச்சாகக் கொண்டு பாடுபடவேண்டும் என நமது நாட்டின் சகந்திரத்திர்காகப் பாடுபட்டு நமக்கு அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த நமது முன்னோர்கள் விரும்பினார்கள்.நமது நாட்டு மக்களின் எதிபார்ப்பும் இதுதான். மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தே மொத்த உடலமிப்பின் செயல்பாடும் அமைவது போல, நமது சமுதாய அமைப்பில் பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டின் அடிப்படையிலேயே ஒட்டு மொத்த தேசத்தின் செயல்பாடும் அமைந்துள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யும் விதத்தில் பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களின் செய்பாடுகள் அமைந்திட நமது அரசியல் சட்டத்தில் உத்திரவாதமான ஏற்பாடுகள் செய்திட வேண்டும் எனக் கருதுகிறோம்.
இது தொடர்பாக சமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கம் முன் வைக்கும் இத்தீர்மானத்தின்படி, தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பெயரிலோ, தங்களது குடும்ப உறிப்பினர்கள் பெயரிலோ சொந்தமாக எந்த விதமான சொத்துகளும் வைத்துக்கொள்ள கூடாதென நமதுஅரசியல் சட்டத்தில் திருத்தம் செய்திட வேண்டுகிறோம். அதே நேரத்தில் தேர்வு செய்யப்படும் பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் குடும்பத்தினருடன் ஒரு தரமான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய,மாநில அரசுகள் செய்துதரவேண்டும். ஒரு முறை தேர்வுசெய்யப்பட்டு அடுத்து வரும் தேர்தலில் மீண்டும் தேர்வு செய்யப் படாத நிலை ஏற்பட்டால் அத்தகையவர்களின் தகுதி மற்றும் திறமைக்கேற்றபடி மத்திய,மாநில அரசுகளின் இதர பணிகளில் இவர்களை ஈடுபடுத்திட வழிவகைகள் செய்திட வேண்டும். பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் தேர்வு செய்யப்ப்பட்ட மன்றங்கள் நிர்ணயிக்கக்கூடிய பணிகளைத்தவிர வேறு இதர வருவாய் ஈட்டக்கூடிய பணிகளிலோ,தொழில்களிலோ ஈடுபடுவது தடைசெய்யப்படவேண்டும்.
மேலும்,பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களை நாட்டின் சொத்தாகக் கருதி நாடு இவர்களையும், இவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டும்.அதே போல இம் மக்கள் பிரநிதிகளும் தேசத்தையே தமது சொத்தாகக் கருதித் தமது முழுத்திறனையும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் அர்ப்பணிக்க வேண்டும்.இதன் மூலம் நாட்டின் சூழ்நிலையில் ஒரு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.நாட்டின் பொது வாழ்வில் ஆரோக்கியமான சூழ்நிலை நிலவிடவும்,எண்ணற்ற தியாகங்களைப் புரிந்து ஒரு உன்னதமான சுதந்திர தேசத்தைத் தந்த நம் முன்னோர்களின் கனவுகளைப் பூர்த்தி செய்திடவும் வேண்டி இத்தீர்மனத்தைச் சமர்ப்பிக்கிறோம்.

2. நமது அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட காலகட்டத்திற்கு மாறாக,இன்று நாடு பொருளாதார நிலையில் பெறும் முன்னேற்றம் அடைந்துள்ளது.இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமான தரமான வாழ்க்கை வாழும் விதத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் உயர்கல்வி,வேலைவாய்ப்பு,வாழ்க்கைக்கான நியாமான ஊதியம், தரமான நவீன மருத்துவ வசதி,குடியிருக்க வீடு ஆகியவற்றை நமது அரசியல் சட்டத்தின் படி அடிப்படை உரிமைகளாக வரையறை செய்திடுமாறு வேண்டி இத்தீர்மானத்தைச் சமர்ப்பிக்கிறோம்.

3. சமுதாயத்தில் சரிபாதியாக உள்ள பெண்களும்,ஆண்களுக்கு இணையாக கல்வி உட்பட அனைத்து அம்சங்களிலும் தங்களது திறனை வெளிப்படுத்தி பெறும் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள்.இந்நிலையில் பாராளுமன்றம்,சட்டமன்றங்கள்,நீதித்துறை,அரசு நிர்வாகத்துறை உட்பட அனைத்து சமுதாய அமைப்புகளிலும் சரிபாதி வாய்ப்புகள் பெண்களுக்குக் கிடைத்திடும் விதத்தில் அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்திடக் கோரி இத்தீர்மனத்தைச் சமர்ப்பிக்கிறோம்.

4. நமது அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில்,பாராளுமன்றம்,சட்டமன்றங்கள்,நீதித்துறை, அரசு நிவாகம் ஆகியவை இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் சிறப்பாகச் செயல்பட,காலத்திற்கேற்ப நமது அரசியல் சட்டத்தை மறுவரையறை செய்திடக் கோரி இத்தீர்மனத்தைச் சமர்ப்பிக்கிறோம்.

நாட்டின் நலன் கருதி சமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கம் சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ள மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றிட ஆவண அனைத்தும் செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தங்கள் உண்மையுள்ள

க.ஆனந்தன்
நிறுவனர்.
சமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கம்



1 comment: